ரோகித் சர்மா, புஜாரா அபாரம்: இந்திய அணி பதிலடி | ஆகஸ்ட் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2வது இன்னிங்சில் ரோகித் சர்மா, புஜாரா அரைசதம் விளாச இந்திய அணி பதிலடி தந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1–0 என, முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்னுக்கு சுருண்டது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 423 ரன் எடுத்திருந்தது. ஓவர்டன் (24) அவுட்டாகாமல் இருந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630081812/IndiaEnglandThirdTestCricketRohitSharmaPujara.html