http://ifttt.com/images/no_image_card.pngமூன்றாவது டெஸ்டில் இந்திய பவுலர்கள் ஏமாற்றினர். கேப்டன் ஜோ ரூட் சதம் விளாச இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1–0 என, முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் லீட்சில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் (52), ஹமீது (60) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629993112/IndiaEnglandThirdTestCricketLeedsJoeRootCentury.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629993112/IndiaEnglandThirdTestCricketLeedsJoeRootCentury.html