அபுதாபியில் பாண்ட்யா சகோதரர்கள் | ஆகஸ்ட் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பதற்காக மும்பை அணியின் குர்னால், ஹர்திக் பாண்ட்யா சகோதரர்கள் அபுதாபி வந்தனர். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) துவங்குகின்றன. இதற்காக சமீபத்தில் அபுதாபி வந்துள்ள மும்பை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு சாம்பியன் மும்பை அணி, தனது முதல் போட்டியில் சென்னை அணியை வரும் செப். 19ல் துபாயில் சந்திக்கிறது. ஐந்து முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணி, இதுவரை விளையாடிய 7 போட்டியில், 4 வெற்றி, 3 தோல்வி என, 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629991942/IPL2021T20CricketMumbaiKrunalHardikPandyaTimSouthee.html