கடைசி நாளில் வீழ்ந்தது விண்டீஸ்: டெஸ்ட் தொடர் சமன் | ஆகஸ்ட் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 109 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடர் 1–1 என, சமனில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் விண்டீஸ் வென்றது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 302/9 (‘டிக்ளேர்’), விண்டீஸ் 150 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின், 329 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணி, 4ம் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்திருந்தது. பிராத்வைட் (17), ஜோசப் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629908414/WindiesPakistanSecondTestCricketShaheenShahAfridi.html