http://ifttt.com/images/no_image_card.pngமூன்றாவது டெஸ்டில் புஜாரா அல்லது ரகானேவுக்கு பதிலாக சூர்ய குமாருக்கு வாய்ப்பு அளிக்கலாம். ‘மேட்ச் வின்னரான’ இவர் விரைவாக ரன் சேர்ப்பதில் வல்லவர்,’’ என இந்திய அணியின் முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்டில் ஷமி, பும்ரா உள்ளிட்ட வேகங்கள் பேட்டிங், பவுலிங்கில் மிரட்ட, இந்திய அணி ‘திரில்’ வெற்றி பெற்றது. தொடரில் 1–0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் வரும் ஆக. 25ல் லீட்சில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் மாற்றம் செய்ய கேப்டன் கோஹ்லி தயங்குவார். வெற்றிக் கூட்டணியை தொடரவே விரும்புவார். ‘மிடில் ஆர்டரில்’ தடுமாறிய புஜாரா, ரகானே ஒருவழியாக லார்ட்ஸ் டெஸ்டில் மீண்டது நல்ல விஷயம். இருப்பினும் ஆடுகளத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படலாம்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629653415/LeedsTestCricketEnglandIndiaSquadSuryakumarYadav.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629653415/LeedsTestCricketEnglandIndiaSquadSuryakumarYadav.html