லண்டனில் இந்திய அணி: லார்ட்ஸ் டெஸ்டில் பங்கேற்க | ஆகஸ்ட் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் லண்டன் வந்தனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட், வரும் ஆக. 12ல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை (ஆர்.டி.,–பி.சி.ஆர்.,) நடத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்தது. இதனையடுத்து கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று காலை லண்டன் வந்தடைந்தனர். இன்று, இந்திய வீரர்கள் பயிற்சியை துவக்க உள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628524107/IndiaEnglandTestCricketSeriesLordsTestGanguly.html