ஜடேஜா விளாசல்: இந்தியா முன்னிலை | ஆகஸ்ட் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா அரைசதம் விளாச, முதல் இன்னிங்சில் 278 ரன் எடுத்த இந்திய அணி 95 ரன் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 183 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 125 ரன் எடுத்திருந்தது. ராகுல் (57), பன்ட் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628267518/IndiaEnglandFirstTestCricketNottinghamRavindraJadejaRain.html