http://ifttt.com/images/no_image_card.pngசேலம் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய திருச்சி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சேலம், திருச்சி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருச்சி அணி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. சேலம் அணிக்கு அக்சய் ஸ்ரீனிவாசன் (19) சுமாரான துவக்கம் தந்தார். உமாசங்கர் சுஷில் (11), அபிஷேக் (14), கேப்டன் டேரில் பெராரியோ (14) நிலைக்கவில்லை. விஜய் சங்கர் (7) ஏமாற்றினார். நிதானமாக ஆடிய முருகன் அஷ்வின் (21) ஆறுதல் தந்தார். ரவி கார்த்திகேயன் (2), கணேஷ் மூர்த்தி (3) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1627837269/TamilNaduPremierLeagueTNPLT20CricketTrichySalemChennai.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1627837269/TamilNaduPremierLeagueTNPLT20CricketTrichySalemChennai.html