தோனியின் புதிய ‘ஹேர் ஸ்டைல்’ | ஜூலை 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை அணி கேப்டன் தோனி, ஐ.பி.எல்., தொடரில் புதிய ‘ஹேர் ஸ்டைலில்’ களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 40. இந்தியாவுக்கு இரு முறை உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர்) வென்று தந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணியை வழிநடத்துகிறார். வித்தியாசமான ‘ஹேர் ஸ்டைல்’ வைப்பதில் ஆர்வம் கொண்டவர். கடந்த 2007ல் கழுத்து வரை கூந்தலுடன் காணப்பட்டார். அடுத்து ‘மொஹாக்’ எனப்படும் கீரிப்புள்ள ‘ஸ்டைலில்’ வந்தார். உலக கோப்பை (2011) வென்ற பின் மொட்டைத் தலைக்கு மாறினார். இப்படி அடிக்கடி ‘ஹேர் ஸ்டைலை’ மாற்றிக் கொண்டிருப்பார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627658577/DhoniCricketIPLChennaiNewLookHairStyle.html