பயிற்சியாளர் அனுபவம் எப்படி: மனம் திறக்கிறார் டிராவிட் | ஜூலை 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடரில் பயிற்சியாளராக சிறந்த அனுபவம் கிடைத்தது,’’ என, டிராவிட் தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இதனையடுத்து இலங்கை சென்ற தவான் தலைமையிலான இந்திய அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்.சி.ஏ.,) இயக்குனராக உள்ள டிராவிட், இந்தியா ‘ஏ’, 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிகளுக்கு ஆலோசகராக உள்ளார். எமிரேட்சில் நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருடன் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அதன்பின் டிராவிட், இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627658473/SriLankaCricketTourIndiaCoachRahulDravidDhawan.html