யுவேந்திர சகாலுக்கு கொரோனா | ஜூலை 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகுர்னால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த சகாலுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இலங்கை சென்ற இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஒருநாள் தொடரை 2–1 எனக் கைப்பற்றிய இந்தியா, ‘டுவென்டி–20’ தொடரை 1–2 என கோட்டைவிட்டது. இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டிக்கு முன், இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ குர்னால் பாண்ட்யாவுக்கு (ஜூலை 28) கொரோனா தொற்று உறுதியானதால், மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, யுவேந்திர சகால், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, தீபக் சகார், இஷான் கிஷான், கிருஷ்ணப்பா கவுதம் என, 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்கவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627658310/YuzvendraChahalKrishnappaGowthamCoronoSriLankaCricketSeries.html