சென்னை அணி முதல் வெற்றி: நாராயண் ஜெகதீசன் அரைசதம் | ஜூலை 28, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசேலம் அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நாராயண் ஜெகதீசன் அரைசதம் விளாச சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, சேலம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. சேலம் அணிக்கு கேப்டன் டேரில் பெராரியோ (39), கோபிநாத் (33), விஜய் சங்கர் (32) ஆறுதல் தர, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது. சென்னை சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627483080/TamilNaduPremierLeagueTNPLT20CricketSalemChennaiNarayan.html