சென்னை–மும்பை மோதல்: ஐ.பி.எல்., அட்டவணை அறிவிப்பு | ஜூலை 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப். 19ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் (ஏப். 9 – மே 2) ‘கொரோனா’ பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் செப். 19 முதல் அக். 15 வரை நடத்த பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. போட்டிகள் துபாய், சார்ஜா, அபுதாபியில் நடத்தப்படும். ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், ‘கொரோனா’ பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627232871/IPLT20CricketUAETimeTable.html