ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது விண்டீஸ் | ஜூலை 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அசத்திய விண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பிரிட்ஜ்டவுனில், 2வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பென் மெக்டெர்மாட் (0), மிட்சல் மார்ஷ் (8), ஜோஷ் பிலிப் (16), கேப்டன் அலெக்ஸ் கேரி (10) ஏமாற்றினர். மாத்யூ வேட் (36), ஆடம் ஜாம்பா (36), வெஸ் அகர் (41) ஆறுதல் தர, ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவரில் 187 ரன்னுக்கு சுருண்டது. விண்டீஸ் சார்பில் அல்சாரி ஜோசப், அகீல் ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627214557/AustraliaWindiesSecondOneDayInternationalCricketPooranHolder.html