http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலை உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 17.7 கோடி பேர் பார்த்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த இதன் பைனலில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியை (ஜூன் 28–23) உலக அளவில் 89 பகுதிகளில் இருந்து 17.7 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதில் 13.06 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என, ஐ.சி.சி., தெரிவித்துள்ளது. இப்போட்டியை இந்திய ரசிகர்கள் தான் அதிகமாக பார்த்துள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627484223/WorldTestChampionshipFinalCricketIndiaNewZealandLiveViewership.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627484223/WorldTestChampionshipFinalCricketIndiaNewZealandLiveViewership.html