http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2–0 என தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு சாம் கர்ரான் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ கேப்டன் குசால் பெரேரா (0), அவிஷ்கா பெர்ணான்டோ (2), பதும் நிசங்கா (5) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய தனஞ்செயா டி சில்வா (91) அரைசதம் கடந்தார். தசுன் ஷனகா (47) ஒத்துழைப்பு தர, இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 241 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரான் 5, டேவிட் வில்லி 4 விக்கெட் கைப்பற்றினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625246809/EnglandSriLankaSecondOneDaySamCurran.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1625246809/EnglandSriLankaSecondOneDaySamCurran.html