ரோகித் ‘நம்பர்–6’: டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் | ஜூன் 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் 6வது இடத்துக்கு முன்னேறினார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 759 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் பைனலில் இரு இன்னிங்சிலும் 34, 30 ரன் எடுத்தார். இப்போட்டியில் சோபிக்காத மற்றொரு இந்திய வீரர் ரிஷாப் பன்ட் (752 புள்ளி) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கேப்டன் விராத் கோஹ்லி (812) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1625063913/ICCTestRankingCricketRohitSharmaAshwinRavindraJadeja.html