திறமை நிரூபிக்க வாய்ப்பு: ஷிகர் தவான் நம்பிக்கை | ஜூன் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇளம் வீரர்கள் திறமையை நிரூபிக்க இலங்கை தொடர் உதவும்,’’ என, ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ஷிகர் தவான், பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டனர். தவிர இந்த அணியில் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஹர்திக், குர்னால் பாண்ட்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கு தயாராகும் விதமாக மும்பையில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட, இந்திய அணியினர் இன்று இலங்கை செல்கின்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624815219/IndiaSriLankaCricketTourDhawanDravid.html