தாயகம் திரும்பிய நியூசிலாந்து வீரர்கள் | ஜூன் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் பைனலில் சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணியினர் நேற்று தாயகம் திரும்பினர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்த இதன் பைனலில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் பங்கேற்ற 11 நியூசிலாந்து வீரர்கள், 8 பயிற்சியாளர் குழுவினர் நேற்று சிங்கப்பூர் வழியாக ஆக்லாந்து சென்றனர். இவர்கள், இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொண்ட பின், குடும்பத்தினருடன் இணைவர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624727894/ICCWorldTestChmpionshipChampionNewZealandSquadReturnto.html