http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3–0 என, தொடரை முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் (51), டேவிட் மாலன் (76) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. லியாம் லிவிங்ஸ்டன் (14), சாம் பில்லிங்ஸ் (2), கேப்டன் இயான் மார்கன் (1), மொயீன் அலி (7) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 180 ரன் குவித்தது. சாம் கர்ரான் (9), கிறிஸ் ஜோர்டான் (8) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் துஷ்மந்தா சமீரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624730320/SriLankaEnglandThirdT20CricketEnglandChampion.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624730320/SriLankaEnglandThirdT20CricketEnglandChampion.html