பயிற்சியில் இந்திய வீரர்கள்: இலங்கை தொடருக்கு ‘ரெடி’ | ஜூன் 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் ‘ஜிம்மில்’ பயிற்சியில் ஈடுபட்டனர். இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (ஜூலை 13, 16, 18), மூன்று ‘டுவென்டி–20’ (ஜூலை 21, 23, 25) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் நடக்கவுள்ளன. இத்தொடரில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஷிகர் தவான் தலைமையில் இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள், மும்பையில் 14 நாட்களுக்கு (ஜூன் 14–28) தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1624462374/SriLankaCricketTourIndiaSquadQuarantineGymPractice.html