http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரோரி பர்ன்ஸ், டான் லாரன்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. பர்மிங்காமில் இரண்டாவது டெஸ்ட் நடக்கிறது. நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங், முதுகுப்பகுதி காயத்தால் விலகினார். இவருக்கு பதிலாக டாம் பிளன்டெல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623346123/NewZealand2ndTestEnglandRoryBurnsDanLawrence.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/06/1623346123/NewZealand2ndTestEnglandRoryBurnsDanLawrence.html