http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்காக விளையாடும் போது, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் ஒரு பொருட்டல்ல,’’ என, மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். இந்திய பெண்கள் டெஸ்ட், ஒருநாள் போட்டி அணி கேப்டன் மிதாலி ராஜ் 38. இதுவரை 10 டெஸ்ட், 214 ஒருநாள், 89 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடிய இவர், இங்கிலாந்து தொடருக்காக மும்பையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த 2018ல் நடந்த பெண்களுக்கான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார், அரையிறுதிக்கான ‘லெவன்’ அணியில் மிதாலியை சேர்க்கவில்லை. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இவர்களுக்கு இடையே மோதல் உருவானது. இந்நிலையில், ரமேஷ் பவார் மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622395919/MithaliRajCricketIndiaCoachRameshPowar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622395919/MithaliRajCricketIndiaCoachRameshPowar.html