இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு: கவாஸ்கர் கணிப்பு | மே 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாக உள்ளது,’’ என, கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன், லார்ட்ஸ் (ஆக. 12–16), லீட்ஸ் (ஆக. 25–29), லண்டன், ஓவல் (செப். 2–6), மான்செஸ்டர் (செப். 10–14) நகரில் நடக்கின்றன. இத்தொடருக்கு முன் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் (ஜூன் 18–22, சவுத்தாம்ப்டன்) விளையாடுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622395651/IndiaEnglandTestSeriesCricketGavaskar.html