http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க இயலாது என இங்கிலாந்து அறிவித்துள்ளது. இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுக்க, தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 31 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில்(செப்டம்பர்–அக்டோபர்) நடத்த பி.சி.சி.ஐ., தயாராகி வருகிறது. இப்போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார் என அணியின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கைல்ஸ் தெரிவித்தார். இதனால் ஜோஸ் பட்லர், மார்கன், சாம் கர்ரான், டாம் கர்ரான் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் ஆட்டத்தை எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளில் காண முடியாது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622137709/IPL2021T20CricketEnglandPlayers.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622137709/IPL2021T20CricketEnglandPlayers.html