http://ifttt.com/images/no_image_card.pngகாயத்தில் இருந்து முழுமையாக மீண்டு, ‘டுவென்டி–20’ உலக கோப்பை, ஆஷஸ் தொடர்களில் பங்கேற்க விரும்புகிறேன்,’’ என, ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 26. வலது கையில் ‘ஆப்பரேஷன்’ செய்த இவர், 14வது ஐ.பி.எல்., தொடருக்கான ராஜஸ்தான் அணியில் இருந்து விலகினார். ஒன்றரை மாதங்களுக்கு பின் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் சசக்ஸ் அணிக்காக விளையாடினார். இப்போட்டியின் போது வலது முழங்கையில் வலி ஏற்பட்டதால் பந்துவீசவில்லை. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622136643/JofraArcherEnglandCricketT20WorldCupAshesTestSeries.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622136643/JofraArcherEnglandCricketT20WorldCupAshesTestSeries.html