http://ifttt.com/images/no_image_card.pngதமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், தமிழகத்தின் ‘யார்க்கர்’ நடராஜன் 29. கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர், ஆஸ்திரேலிய தொடரில் மூன்று வித போட்டியிலும் அறிமுகமானார். சமீபத்தில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக 2 போட்டியில் மட்டும் பங்கேற்ற இவர், முழங்கால் காயத்தால் விலகினார். கடந்த மாதம் இவரது முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ வெற்றிகரமாக நடந்தது. காயத்தில் இருந்து தேறி வரும் இவர் வீட்டில் இருந்தபடி, மீண்டு வர தேவையான மறுவாழ்வு பயிற்சி, உடற்தகுதி பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622136496/NatarajanShamiCOVID19VaccinationFirstDose.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622136496/NatarajanShamiCOVID19VaccinationFirstDose.html