http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு, கேப்டன் கோஹ்லி, புஜாரா உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. இங்கிலாந்து தொடருக்காக மும்பையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இவர், நேற்று தனது 59வது பிறந்தநாள் கொண்டாடினார். இவருக்கு, கேப்டன் விராத் கோஹ்லி, புஜாரா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட இந்திய வீரர்கள் ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்தனர். கோஹ்லி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில், ‘‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவி அண்ணா. சிறப்பாக அமையட்டும்,’’ என, தெரிவித்திருந்தார். இத்துடன் கைகுலுக்குவது போன்ற ‘ஈமோஜி’யை பதவிட்டிருந்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622137070/RaviShastriIndiaCricketCoachBirthDayWishesViratKohli.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1622137070/RaviShastriIndiaCricketCoachBirthDayWishesViratKohli.html