இந்திய அணிக்கு சிக்கல்: மான்டி பனேசர் எச்சரிக்கை | மே 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசவுத்தாம்ப்டன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறினால் இந்திய அணிக்கு சிக்கலாகிவிடும்,’’ என, மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்குகிறது. இப்போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மான்டி பனேசர் கூறியது: தற்போது இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இப்போதுள்ள தட்பவெப்பநிலை தொடரும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்தியா, நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையும். போட்டியில் பந்து ‘சுவிங்’ ஆக வாய்ப்பு உள்ளது. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக அமையலாம். ஒருவேளை வானம் தெளிவாக காணப்படும் பட்சத்தில் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621792624/WorldTestChampionshipFinalIndiaNewZealandCricketMontyPanesar.html