கோப்பை வென்றது பாகிஸ்தான்: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம் | ஏப்ரல் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடரை 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் இருந்தது. ஹராரேயில் 3வது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற முதலில் ‘பேட்’ செய்த பாகிஸ்தான் அணிக்கு ஷர்ஜீல் கான் (18) சுமாரான துவக்கம் தந்தார். பின் இணைந்து அபாரமாக ஆடிய முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசம் அரைசதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்த போது பாபர் ஆசம் (52) அவுட்டானார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619361813/Zimbabwe3rdT20CricketPakistanChampion.html